உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானிய தூதரக பணியாளர்கள் வெளியேற கட்டார் உத்தரவு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
53 பார்வைகள்

கட்டார் வெளியுறவு அமைச்சகம், ஈரான் தூதரகத்துடன் தொடர்புடைய சில அதிகாரிகளை “விரும்பத்தகாத நபர்கள்” என அறிவித்து, 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், இராணுவ அதிகாரி, பாதுகாப்பு பொறுப்பாளர் மற்றும் இரு தூதரக பணியாளர்கள் அடங்குகின்றனர்.


இந்த அறிவிப்பு, வெளியுறவு அமைச்சக இயக்குநர் இப்ராஹிம் யூசிஃப் ஃபக்ரோ மற்றும் ஈரான் தூதர் அலி சலேஹாபாதி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.


கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கத்தின் படி, சர்வதேச சட்டக் கோட்பாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி, கட்டாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கட்டார் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0