நிலக்கரி விசாரணை குறித்து சஞ்சீவ எதிரிமான்னின் கருத்து.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன், நாட்டில் நடப்புள்ள நிலக்கரி கொள்முதல் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிட்டதைச் சட்டவிரோதமாகவும், விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் முயற்சியாகவும் கண்டித்து கருத்து தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “நிலக்கரி ஊழல் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பல தரப்பினரால் முறைப்பாடுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கூறியது தவறான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அரசு செயற்கையாக நிலக்கரி தட்டுப்பாடு உருவாக்கி அவசர கொள்முதல்கள் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியார். ஜனாதிபதி கோப் குழுவில் விவாதிக்கலாம் என்ற யோசனையை எதிர்த்து, எதிர்க்கட்சிகளுக்கு நீண்டகாலமாக கோரப்பட்ட கோப் குழு தலைவர் பதவியை உடனடியாக ஒப்படையுமாறு சவால் விடுத்தார்.
சமூக-பொருளாதாரநெருக்கடிகளை கருத்தில் கொண்டு, எதிர்வரும் வார இறுதியில் திட்டமிடப்பட்ட கட்சியின் பெரிய அரசியல் பேரணிகளை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாகவும் அவர் அறிவித்தார்.