உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எரிபொருள் நெருக்கடி – மரக்கறி விலைகளும் அதிகரிப்பு .!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.அதன்படி, இன்றைய மரக்கறி விலைப்பட்டியலுக்கு அமைய ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கெப்பட்டிபொலயில் போஞ்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை பீட்ரூட் ஒரு கிலோகிராம், நுவரெலியா மற்றும் கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேநேரம், நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 350 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கெப்பட்டிபொலயில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0