உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய பலநாள் மீன்பிடி படகு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

71 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

74 0 0