உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்கள் பிரச்சினைகளில் ஒன்றிணையாத எதிர்க்கட்சிகள்: சுகாதார அமைச்சர் கடும் விமர்சனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கண்டி – உலகளாவிய நெருக்கடிகளை அரசை வீழ்த்த பயன்படுத்த முயல்கிற எதிர்க்கட்சிகள், மக்களின் அன்றாட சேவைகள் குறித்து கவலை காட்டுவதில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுடன் கருத்து பகிர்ந்த அவர், “சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் வலுசக்தியை வரையறைகளுடன் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது.

அன்றாட சேவைகளை முடக்குவது தீர்வு அல்ல. மார்ச் முதலாம் திகதிக்குப் பிறகு எரிபொருள் கொள்வனவு வழமைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறான அநாவசிய சேமிப்புகளை குறைத்து வழமையான பயன்பாட்டை தொடர வேண்டும். பொதுச் சேவைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திட்டமில்லை” என்றார்.


அவர் மேலும் கூறியதாவது, “மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நேரங்களில்எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவில்லை. டிட்வா புயல் அல்லது தற்போதைய உலகளாவிய போர் நெருக்கடி போன்ற சூழ்நிலைகளை அவர்கள் அரசை வீழ்த்த பயன்படுத்துகிறார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பிறகு ஆசனங்களை கைப்பற்றி அதிகாரத்தைப் பிடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொருளாதார மேம்பாடு அல்லது நாட்டின் அபிவிருத்தி குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. நெருக்கடி நேரங்களில் அதிகாரம் கைப்பற்ற குறுக்கு வழியை தேடுவதே அவர்களின் நோக்கம்”.


“எது எவ்வாறாக இருந்தாலும், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கம். அரசியல் இலாபம் தேடாமல், இந்த நெருக்கடி காலத்தில் நாட்டுக்காக இணைந்து செயல்பட சகல தரப்பினரையும் அழைக்கின்றோம்” – என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0