உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் தேவைப்பாடுகளை நிறைவேற்றி தருமாறு சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு பிரதி கல்வி அமைச்சர் மருத்துவர். மதுர செனவிரத்ன அவர்கள் நேற்று (11.03.2026) வருகை தந்திருந்தார்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் குறித்த வருகை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. முக்கிய தேவைப்பாடுகள் குறித்து பாடசாலை அதிபர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இப் பாடசாலையானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முக்கியமான பாடசாலை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான பாடசாலையாகும். அதுமட்டுமல்லாது, வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஒரு வளநிலையமாகவும் இப்பாடசாலை பயன்படுகின்றது. வலய மட்ட, மாகாண மட்ட போட்டிகள் இங்கு நடைபெறுகின்றது.

எனவே, இப் பாடசாலையின் பெளதீக மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்துதருமாறு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். குறிப்பாக பாடசாலையின் மைதான அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0