போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்! அதிரடி அறிவிப்பு.!
ஈரானுடன் நடந்து வரும் போரை வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமானாலும், அதற்காக அமெரிக்கா முழுமையாக தயாராக உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு அளித்த செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதைக் குறித்த விவரங்களை எதிரி, ஊடகம் அல்லது வேறு யாருடனும் பகிரக்கூடாது.அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹெக்செத் மேலும் கூறியதாவது, ஈரான் போராட முடியாது என்பதும், எங்களுக்குத் தெரியும்; ஈரான் படைகள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகிசரணடைவார்கள்.மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அதன் திறன் தொடர்ந்து குறைந்து செல்லும் என்றும் அவர் எச்சரித்தார். இதை ஆரம்ப கட்ட நடவடிக்கை மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.