உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (07) மத்திய லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த அணிவகுப்பில் 5,000 முதல் 6,000 பேர் வரை கலந்து கொண்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை ஒழிக்கும் இயக்கம், பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், பிரிட்டனின் முஸ்லிம் சங்கம், பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மன்றம் மற்றும் அல்-அக்ஸா நண்பர்கள் இயக்கம் உள்ளிட்டோர் சனிக்கிழமை பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் அருகே உள்ள மில்பாங்கில் கூடிய பின்னர் தூதரகத்தை நோக்கி இந்தப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

பல போராட்டக்காரர்கள் ஈரானிய மற்றும் பாலஸ்தீனிய கொடிகளையும், கடந்த சனிக்கிழமை போரின் போதான தொடக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் உருவப்படங்களையும் கைகளில் ஏந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க அதிகாரிகளை அனுப்பிய மெட்ரோ காவல் துறை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நியமிக்கப்பட்ட பாதைகளில் கூடி, மாலை 5 மணிக்குள் தங்கள் அணிவகுப்பு பேரணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்னதாக விதித்திருந்தது.மில்பாங்கைச் சுற்றி பல பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன, பல அதிகாரிகள் சாலையில் ரோந்து பணிகளை முன்னெடுத்தும் இருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0