சவூதி எண்ணெய் வயலை நோக்கி 6 டிரோன் தாக்குதல்.!
சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சு, ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த ஆளில்லா வானூர்தி (Drone) ஒன்றை தமது வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில், 6 ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஒரு வான்படைத் தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சு, இந்த தாக்குதல்களில் எந்தவொரு எண்ணெய் நிலையமும் சேதமடைந்ததாக இல்லை என்றும், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு மற்றும் எதிர்ப்புப் நடவடிக்கைகள் மூலம் நிலையை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.