போரை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு சபை மௌனம் – ஈரான் அதிருப்தி.!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் பெரும் நாசமான நிலைமைக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UN) பாதுகாப்பு சபை மௌனம் காத்துவருவதை கடுமையாக கண்டித்துள்ளது.
ஈரானிய பிரதிநிதி அமீர் சயீத் இராவானி கூறியதன் படி, நகரங்கள், விமான நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் இலக்காகி அழிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
அமேற்படி தாக்குதல்களில் 180க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதமடைந்துள்ளன, 13 சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஈரான் அதிகாரிகள், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பொதுமக்களை குறிவைத்து தாக்குகின்றனர். 2,000 பவுண் எடையுள்ள குண்டுகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசி பெரும் அழிவை ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள் கூறுவது போல, தாக்குதல்கள் இராணுவத்தளங்களுக்கு மட்டுமே குறிவைக்கப்படுவது அல்ல” என வலியுறுத்தியுள்ளனர்.
ஈரான் தொடர்ந்தும் உலக சமுதாயத்திடம் இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.