உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முடங்கிய விமான சேவை மற்றும் வணிக நடவடிக்கைகள் .!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

ஈரான் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனகுறிப்பாக எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பங்ளாதேஷ் ஆடைத்துறையின் சில்லறை விற்பனையாளர்களின் வணிக நடவடிக்கைகள் நிலைகுலைந்து போயுள்ளன.

ஆடை ஏற்றுமதிகள் விற்பனைக்கு செல்ல முடியாமல் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகின் முக்கிய ஆடை உற்பத்தி மையமாக திகழ்கிறது தெற்காசியா.அனைத்துலக அளவில் உடைகள், டி-சட்டைகள், ஜீன்ஸ் உள்ளிட்ட பலவகையான ஆடைகளின் விற்பனை விநியோகம் சந்தையில் தடையின்றி நடைபெற, நாடுகள் பலவும் பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை நம்பியுள்ளன.

ஆனால், விற்பனைக்காக அனுப்பப்பட்ட ஆடைகள் தற்போது டாக்கா விமான நிலையத்தில் தேங்கி நிற்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்பாரோ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஷோவோன் இஸ்லாம் தெரிவிக்ழகயில்,என் கடையின் ஐரோப்பிய வாடிக்கையாளர்களில் முன்னணி நிறுவனங்கள் உள்ளன.

இந்தச் சரக்குகளை துபாய் வழியாக இங்கிலாந்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்ல அயல்நாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.ஆனால் துபாய் விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டதால் நாங்கள் இப்போது மிகவும் கடினமான நிலையில் இருக்கிறோம்.

மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். ஆனால், அவற்றில் எதுவும் எளிமையானவை அல்லது செலவு குறைந்தவை அல்ல என கூறியுள்ளார்.மத்திய கிழக்கில் பெரும்பாலான வான்வெளி இன்னும் மூடப்பட்டுள்ளது.தெற்காசியாவின் பெரும்பகுதி, சரக்குகளை அனுப்ப வளைகுடா விமான நிறுவனங்களையே நம்பியுள்ளது.இதற்கிடையே, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் தொடர்ந்து நீடிப்பதால், உற்பத்தி, ஏற்றுமதித் திறன் குறைந்து, விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0