உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஈரானின் முக்கிய உள்நாட்டு விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) விமான நிலையத்தில் இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது என்று பிபிசி செய்திச் சேவை தகவல் தெரிவித்துள்ளது.சம்பவ நேரத்தில் விமான நிலையத்தில் பல விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததையொட்டி, வெடிப்பின் தாக்கம் பரபரப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலால் பெரும் புகைமூட்டம் கிளம்பி, அந்த சம்பவம் தொடர்பான பல வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


ஈரானிய ஊடகங்கள், விமான நிலையத்தின் பல பகுதிகள் எதிரிகளின் இலக்காகியுள்ளதாகவும், அதனால் விமான இயக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு, மார்ச் 4-ஆம் திகதியும் இஸ்ரேல் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்துப் தாக்குதல் நடத்தி, ஹெலிகொப்டர் உற்பத்திப் பிரிவுகளும் பல கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இன்றைய தாக்குதலில் விமான நிலையத்தின் எந்த இடங்கள் நேரடி இலக்காகியுள்ளன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0