ஈரானில் நிலநடுக்கம் – போர் சூழலில் மக்களுக்கு புதிய நெருக்கடி!
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ஒருங்கிணைந்த உலக நேரப்படி அதிகாலை 03.18 மணியளவில் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இது காலை சுமார் 06.48 மணிக்கு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், இது ஒப்பீட்டளவில் ஆழமற்ற நிலநடுக்கமாக கருதப்படுகிறது. மையப்பகுதி பந்தர் அப்பாஸ் நகரத்தின் மேற்கே சுமார் 74 முதல் 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இதனால் உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.