உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோனி ரீட், தனது கணவர் மீது நடைபெறும் விசாரணைகள் முடியும் வரை தாமாகவே முன்வந்து பதவியிலிருந்து விலகியதாக தெரிவித்தார்.

உள் விசாரணைகள் நிறைவடையும் வரை தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, இந்த விவகாரத்தில் நடைபெறும் கட்சியின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜோனி ரீட்டின் கணவர் டேவிட் டெய்லர், சீனாவின் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த புதன்கிழமை லண்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.கைது செய்யப்பட்ட மற்றவர்களின் விபரங்கள் வழக்கமான காவல்துறை நடைமுறையின்படி வெளியிடப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0