உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நேபாளத்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் .!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

நேபாளத்தில் இன்று (05) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்றது.கடந்த ஆண்டு அந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிலைமை சிக்கலானதாக மாறியது. இதையடுத்து பிரதமர் தனது பதவியை இராஜிநாமா செய்தார்.


பின்னர் நாட்டை நிர்வகிக்க இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இந்தத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சியின் ஷேர் பகதூர் டூபா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்ப கமல் தஹால் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.


நேபாள பாராளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 165 பேர் நேரடி தேர்தல் முறையிலும், 110 பேர் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0