உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தீவிரமடையும் மோதல்! மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
76 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


நகரங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் சந்தைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடற்கரைக்கு அருகில் ஈரான் கடற்படை கப்பல் ஐ.ஆர்.ஐ.எஸ். தேனாவை டார்பிடோ தாக்குதலால் மூழ்கடித்ததாகவும், அதில் குறைந்தது 87 மாலுமிகள் உயிரிழந்ததாகவும், 32 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா அமைப்பு ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகள் துருக்கி வான்பரப்பில் நுழைந்த ஈரானிய ஏவுகணையை தடுத்து வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டணியை போரில் ஈடுபடுத்தாது என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் செனட் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

52 வாக்குகள் எதிராகவும், 47 வாக்குகள் ஆதரவாகவும் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த மோதலால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக அறிவித்ததையடுத்து பல கப்பல்கள் அந்த வழித்தடத்தை தவிர்த்து செல்கின்றன.


சவுதி அரேபியா மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. துபாயில் கேட்ட வெடிச்சத்தங்கள் வான்பாதுகாப்பு தடுத்தல்களால் ஏற்பட்டவை என்றும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோர்தானின் அகாபா நகரம் அருகே ஏவுகணை ஒன்று சென்றதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அது வான்பாதுகாப்பால் இடைமறிக்கப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கத் தூதரகம் அருகிலுள்ள பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஈராகில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பு நிலை மேம்படும் வரை நாட்டை விட்டு வெளியேறுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மோதலை முடிவுக்கு கொண்டுவர ஈரான் உளவுத்துறை அமெரிக்காவுக்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தற்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0