ஈரான் தொடர்பான பொருளாதாரத் தடைக்கு சீனா, ரஷ்யா எதிர்ப்பு.!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் இம்மாத தலைமைப் பொறுப்பு அமெரிக்காவிடம் உள்ளது. அதன்படி, இம்மாதத்திற்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார்.அந்தத் திட்டத்தில் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கும் வகையில் 1737 தடைகள் குழுவின் செயல்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்கா முன்வைத்த இந்த பணித் திட்டத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தங்களுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்தத் திட்டத்தை நிராகரித்தன. இதன் காரணமாக அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனது.
அமெரிக்கா முன்மொழிந்த தற்காலிக பணித் திட்டத்தில் ஈரான் தொடர்பான 1737 தடைகள் குழுவின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் இடம்பெற்றிருந்ததால், அதனை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.