உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர்த் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.இதனிடையே, ஈரானின் புதிய உயர்த் தலைவராக அவரது 56 வயதான மூத்த மகன் மொஜ்தபா கொமெய்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கொமெய்னியின் உடலை, அவரது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல், பிறந்த ஊரான மஷாத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


மஷாத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்குமுன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகைக் கூடத்தில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்கும் விடைபெறும் நிகழ்வொன்றையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பாதுகாப்பு காரணங்களால் இறுதிச் சடங்குகள் நடைபெறும் திகதி மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அவை பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் ஏற்கனவே பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தெஹ்ரானில் மேற்கொண்ட தாக்குதலில் கொமெய்னி உயிரிழந்தார்.அவரது மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கமும், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0