உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலகில் குறையப்போகும் எரிபொருள் விலை: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிரான போருக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறிது காலத்திற்கு மசகு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் ஈரானுக்கு எதிரான போருக்குப் பின்னர் முன்பைவிட விலை குறைவடையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தேவைப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படை பாதுகாக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0