உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெஹ்ரானில் பல ஆண்டுகளாக உளவு நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேலின் மொசாத் மீது தகவல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
66 பார்வைகள்

ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இலக்கு வைத்து, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் பல ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்திகளின்படி, தலைநகர் டெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கேமராக்கள் மற்றும் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மூலம் காமேனியின் இயக்கங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அலுவலகத்திற்கு வருகை தரும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், அவருடன் இருப்போர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் நீண்டகாலமாக திரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அத்துடன், கடந்த காலங்களில் ஈரானில் பணியாற்றிய அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவங்களிலும் மொசாத் தொடர்புடையதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவை அனைத்தும் சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுகுறித்து விரிவான விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0