உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சைப்ரஸில் பிரித்தானிய இராணுவத் தளத்தை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச ரீதியில் பரபரப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானியா தனது இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சைப்ரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளத்தை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலின் ஹைஃபா நகரை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைகளை மூலத்திலேயே அழிக்கும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தயார் என பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன் தளமே தற்போது இலக்காகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சைப்ரஸில் உள்ள பிரித்தானிய வானூர்தி தளம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் குறைந்த அளவிலான சேதம் ஏற்பட்டதுடன் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0