உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்குத் தகுந்த பதிலடிக்கு திட்டம் – வளைகுடா நாடுகள் அறிவிப்பு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டறிக்கையில் வளைகுடா நாடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:”பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. ஈரானின் இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பு பிராந்திய நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0