உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா– இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் போராட்டங்கள்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஈரான் மீதான அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அதில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் பலர் உயிரிழந்ததாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், இத்தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.இதற்கு பதிலடி நடவடிக்கையாக, ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், துபாய், டோஹா, கட்டார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாலஸ்தீன இளைஞர் இயக்கங்கள், ஜனநாயக சோசலிசவாதிகள், “Code Pink” பெண்கள் இயக்கம் மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து வார இறுதி முழுவதும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ சர்வதேச அறிவிப்புகள் வெளியாகும் வரை நிலவரம் தெளிவாக அறிய முடியாத சூழல் நிலவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0