அமெரிக்கா – ஈரான் மோதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரஷ்யா வலியுறுத்தல்.!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தை உடனடியாக நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுக்கும் ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் உட்பட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாகவும், ஈரானின் அரசு மற்றும் இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. இதற்குப் பதிலாக ஈரான் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யா வெளியுறவுத்துறை, நிலவும் பதற்றங்களை குறைக்கவும், வன்முறைகளை நிறுத்தவும், அரசியல் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அனைத்துப்பிரச்சினைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.