ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொ*ல்லப்பட்டமை உறுதி.!
ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர்.
அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்தது.
ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் 40 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.