இரு மகிழுந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு.!
லிபெர்கூர் நகரில் இரண்டு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று Boulevard Ferdinand-Darchicourt பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. பதினைந்து வயதுடைய நான்கு சிறுவர்கள் பயணித்த மகிழுந்தும், மற்றொரு மகிழுந்தும் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மகிழுந்தில் பயணித்த முப்பத்தொன்பது வயதுடைய சாரதியும், இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்குப் பின்னர் காலை ஆறு மணி வரை அப்பகுதியில் போக்குவரத்துதடை செய்யப்பட்டிருந்தது.