உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

இலங்கை செய்திகள் 39 நிமிடங்கள் முன்
72 பார்வைகள்

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில் அதிகளவான வாடகை கோரப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட தூரப் பிரதேசங்களில் இருந்து இரவு நேரங்களில் ஹட்டன் நகரை வந்தடையும் பயணிகள், தங்களது வீடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமையை பயன்படுத்தி, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தை அண்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் சில முச்சக்கரவண்டி சாரதிகள், பகல் நேரத்தில் அறவிடப்படும் வாடகையை விட அதிகளவான கட்டணத்தை கோருவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் பகல் நேர வாடகையை விட இருமடங்கு வரை கட்டணம் கோரப்படுவதாகவும், அந்தத் தொகையை வழங்க முடியாது என பயணிகள் தெரிவிக்கும்போது, மாற்று போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ளுமாறு சாரதிகள் கூறுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் ஹட்டன் நகரில் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பயணிகளுக்கு வேறு போக்குவரத்து வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாகவும், இதனால் சில சாரதிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், இரவு நேரங்களில் முச்சக்கரவண்டி சேவையில் ஈடுபடும் சாரதிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது, நீண்ட தூரப் பயணங்களின் பின்னர் ஏற்படும் செலவுகள் மற்றும் இரவு நேரப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் போன்றவை அவர்களுக்கு சவாலாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றனர்.

எனினும், இத்தகைய காரணங்களை முன்வைத்து பயணிகளிடம் நியாயமற்ற வகையில் அதிக கட்டணம் அறவிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்ற முறைப்பாடுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போதைய அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும் பயணிகள் நினைவுகூருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, பயணிகளுடன் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது மீண்டும் இதுபோன்ற முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வரும் பயணிகளுக்கு இவ்வாறான நேரத்தில் முச்சக்கரவண்டி சேவை பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாக பயன்படுத்தப்படும் நிலையில், நீண்ட தூரப் பயணத்தை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் ஹட்டன் நகரை வந்தடையும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதி தொடர்பில் ஏற்படும் சிரமம் மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தை அண்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, பயணிகளுக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் நியாயமான முறையில் சேவை நடைபெறுவதற்கான உரிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே, இரவு 9 .30 மணிக்கு ஹட்டன் ஓல்ட்டன் வழியாக சாமிமலை – ஹட்டன், மஸ்கெலியா – ஹட்டன் வழியாக சாமிமலை – ஹட்டன், காசல்ரீ வழியாக நோட்டன் – ஹட்டன், கொட்டகலை வழியாக டயகம – ஹட்டன், நோர்வூட் வழியாக பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பேருந்து சேவைகள் நாடாத்த அரச தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

75 0 0
இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

87 0 0
இலங்கை செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை?

“போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா? இன்று வரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும்…

86 0 0
இலங்கை செய்திகள்

ஆடை உந்துருளியின் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய…

65 0 0