இந்தியா– பாகிஸ்தான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து.!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தாம் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தனது நிர்வாகத்தின் முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், தாம் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா–பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தம்மிடம் பேசியபோது, தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் சுமார் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் எனத் தெரிவித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.மேலும், ரஷ்யா–உக்ரைன் போர் தாம் அதிபராக இருந்திருந்தால் நடைபெறாது என்றும், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் தமது நேரடி முயற்சியால் ஏற்பட்டது என்ற ட்ரம்பின் கூற்றை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலமே நிலைமை சீரானதாக மத்திய அரசு விளக்கம் அளித்து வருகின்றது.