பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலில் 34 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பலுசிஸ்தான் மாகாணத்திலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தனி நடவடிக்கையில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்துவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.