உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
66 பார்வைகள்

பிரான்ஸ் அரசு வழங்கிய சம்மனுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் வரை, அரசு அதிகாரிகள் எவரும் அமெரிக்கத் தூதரைச் சந்திக்க முடியாது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோல் பரோட் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் மருமகனான ஜாரெட் குஷ்னர் அவர்களின் தந்தை சார்லஸ் குஷ்னர், தற்போது பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவி வகிக்கிறார்.


லியோன் நகரில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை, பிரான்ஸ் அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தது.அதற்கு எதிர்ப்பை பதிவு செய்ய சார்லஸ் குஷ்னருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் அதற்கிணங்க நேரில் ஆஜராகவில்லை.


இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜீன் நோல் பரோட், சம்மனுக்கு மதிப்பளித்து அவர் முன்னிலையாகும் வரை, பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0