உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு வேட்பாளர்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

கொலம்பியா நாட்டில் மார்ச் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், செயற்கை நுண்ணறிவு (AI) வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்காக “IA” என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு அவதாரம் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது.


கொலம்பியாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, அதற்கு “ கைடானா” எனப் பெயரிட்டுள்ளார். கைடானா என்பது 16ஆம் நூற்றாண்டில் ஸ்பானியக் காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பழங்குடியினத் தலைவியின் பெயராகும்.

நீல நிற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த AI அவதாரத்திற்கு தனிப்பட்ட குரலும் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதற்காக வாக்களிக்க விரும்பினால், வாக்குச்சீட்டில் “IA” என்ற பெயரைத் தேர்வு செய்ய வேண்டும்.கொலம்பிய சட்டம் மனிதரல்லாத வேட்பாளரை நேரடியாகப் பதிவு செய்ய அனுமதிக்காததால், கைடானா வெற்றி பெற்றால், அதன் பரிந்துரைகளின்படி செயல்படும் மனிதர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் எனத் தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உதாரணமாக, 200 பக்க மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டால், கைடானா அதனைத் தரவுகளாகச் சுருக்கி, தகவல் விளக்கப்பட (Info Graphics) வடிவில் மாற்றி, தன் சமூகத்தினருடன் பகிர்ந்து கொள்ளும். பின்னர், சமூக உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகளை “ஆம்” மற்றும் “இல்லை” என வகைப்படுத்தி, 50 சதவீதத்திற்கும் அதிக ஆதரவு பெறும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறை அமையும் எனக் கூறப்படுகிறது.


எனினும், தரவு பாதுகாப்பு மற்றும் மாறுபட்ட கருத்துக்களை ஒருங்கிணைக்கும் திறன் போன்ற துறைகளில் இன்னும் மேம்பாடு தேவைப்படுவதாக அவதாரத்தை உருவாக்கிய ரெடோண்டோ தெரிவித்துள்ளார்.இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும், ஜனநாயக நடைமுறையில் செயற்கை நுண்ணறிவின் நேரடி பங்கேற்பு அவசியமா என்பது குறித்து சிலர் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

82 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

81 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0