உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்: சுங்கவரி கொள்கை நியாயமானது என வலியுறுத்தல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
64 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார்.

இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு, தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரியை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்க மக்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1 மணித்தியாலம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், “யுகத்திற்கு ஏற்ற ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு” தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.முன்னதாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ட்ரம்ப் இதன்போது மீண்டும் கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிப்பதற்காக நிகழ்த்தப்படும் ‘அரசின் நிலை’ உரையாக இது அமைந்திருந்தது. ட்ரம்பின் கருத்துப்படி, அமெரிக்கப் பொருளாதாரத்தின் தற்போதைய எழுச்சிக்குச் சுங்கவரி வசூலிப்பதே பிரதான காரணமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

81 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

81 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0