உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் 15% இறக்குமதி வரி: இங்கிலாந்து – அமெரிக்கா வர்த்தக பதற்றம் தீவிரம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 15 சதவீத உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பதற்றம் நிலவி வருகிறது.ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்காதால், அதற்குப் பதிலடி கொடுக்க தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயார் என இங்கிலாந்து எச்சரித்துள்ளது.


அமெரிக்க உச்ச நீதிமன்றம் பழைய வர்த்தக வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, புதிய சட்ட விதிகளின் கீழ் இந்த வரி அமல்படுத்தப்படுவதால் சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.இங்கிலாந்தின் முக்கிய ஏற்றுமதி துறைகளில் சிலவற்றுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த வரி உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது வர்த்தக ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0