உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆய்வமைப்புகள் இணைந்து, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி பொதுமக்களிடம் ஆய்வு நடத்தி முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளன. அதில் 58 சதவிகித கனேடியர்கள் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல எனக் கூறியுள்ளனர்.


அதே கருத்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க மக்களிடையிலும் காணப்படுகின்றது. மேலும், 57 சதவிகித பேர் ஆபத்து மற்றும் சவால்கள் எழும் நேரத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான கனேடியர்கள், அமெரிக்கா மற்ற நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதைவிட, பிரச்சினைகளை உருவாக்குவதாக கருதுகிறார்கள்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும், அமெரிக்கா குறித்த கனேடியர்களின் எண்ணத்தை பெரிதும் பாதித்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0