உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று காலை 8.30 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0