விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், ‘கப்’ ரக வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் சிவகுமார் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் கடந்த 23ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.
தர் மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.