வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார ஒத்துழைப்பு மையம் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்களால் ஆரம்பித்து வைப்பு!
நாட்டின் முதல் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேரத்ன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இந்த மையம் வவுனியா, பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில்முனைவு, புதுமை, ஆராய்ச்சி, வணிகமயமாக்கல், வணிக மேம்பாடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உதவிகள் ஆகியவை இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு ‘வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனங்களை’ பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பிக்கும் நோக்கோடு வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த ஆய்வு நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அத்துடன், முன்னணி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல், தொழில்நுட்ப கண்காட்சியும் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு இளைஞர்களின் கண்டுபிடிப்புக்கள், கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள் நிறுவப்படும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களும் இக் கண்காட்சியில் பங்கேற்றனர்.
இதன்மூலம் வடமாகாணத்தில் முதன் முதலாக தரச்சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் கெந்துன்நெத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேயசேன, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் அ.அற்புதராஜா உட்பட அமைச்சின
அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

