உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுவரெலியாவில் தொடரும் உறைபனி பொழிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நுவரெலியாவில் காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும்(24.01.2026) பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது.நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் இந்த பனிமூட்ட நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகவும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

52 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

57 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0