உயிர் அச்சுறுத்தல் காரணமாக என்.பி.பி பிரதேச சபை உறுப்பினர் நாட்டை விட்டு தப்பியோட்டம்.!
தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா றஜீவா, இனந்தெரியாத நபர்களால் மூன்று தடவைகள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உயிர் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட கிளை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தினகரன் செய்திப்பிரிவு சம்பந்தப்பட்ட உறுப்பினரைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றது. அவருடன் தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.