உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“தீவிர அரசியலில் இனி ஈடுபடமாட்டேன் – ரணில் விக்கிரமசிங்க.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தீவிரமான அரசியலில் இனிமேல் தாம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நேற்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளை அவர் பெற்றார்.

இந்த விஜயத்தின் போது, அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்தார். பின்னர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்கிரமசிங்க கலந்துரையாடினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அரசியல் விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, அவர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளித்து, தான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறினார் ரணில் விக்கிரமசிங்க.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

41 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

50 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

58 0 0