உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டம் வெளிப்படைத்தன்மையற்றது – தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

2011 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இன்றுவரை வெளிப்படைத்தன்மையின்றி, மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இந்தத் திட்டம் தொடர்பான தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுடன் ஆலோசனை இன்றியே மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால், வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள், நீர்ப்பாசனக் குளங்கள், விவசாய நிலங்கள், தொல்லியல் இடங்கள் மற்றும் வனப்பகுதிகள் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாக இருவரும் எச்சரித்தனர்.


மேலும், இந்தத் திட்டம் தமிழர்களின் இனப்பரம்பல் அமைப்பை மாற்றியமைக்கும் முயற்சியாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புகள், வனஜீவராசி அழிவு, மனித–யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, திட்டப் பிரதேச மக்களுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் தெளிவூட்டல் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படமாட்டார்கள் என்றும் அமைச்சரவை தரப்பு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

43 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0