உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம் !

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பித்து  (23) வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிண்ணியா நகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்ற பைசல் நகர், அண்ணல் நகர், ஆலங்கேணி, மாஞ்சோலைச் சேனை  போன்ற பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கூடுதல் நீளங்களை கொண்ட வீதிகள்  இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில்  முதலாவதாக கூபா நகர் ஜும்ஆ பள்ளியின் முன்னாலுள்ள 870 மீற்றர் நீளமான வீதியை புனரமமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளன.கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.நீண்டகாலமாக புனரமைப்பு செய்ய படாத வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

41 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

50 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

58 0 0