உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலைதற்போதைய அரசுக்கு ஏற்படும்- சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பாதையில் தற்போதைய அரசாங்கம் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.

அன்றைய அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களை ஒத்ததாக தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எவ்வாறு விவசாயத்தை வைத்து முறையற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆட்சியில் இருந்து விலகினார்களோ அதேபோன்று கல்வியின் ஊடாக இந்த அரசாங்கம் அதே பாதையில் நோக்கி செல்வது மிகத்தெளிவாக தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக கட்டமைப்பிலும் இனவாதமாக அரசாங்கம் சில விடயங்களை முன்னெடுப்பதாகவும் அது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல் நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

41 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

50 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

58 0 0