உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் – கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

இவர் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களுக்கு உதவி செய்யும் போர்வையில் அவர்களின் ஏ.ரி.எம் அட்டைகளை பெற்றுக்கொண்டு அதன் கடவுச்சொல்லையும் கண்டறிந்து ஏ.ரி.எம் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் போலி ஏ.ரி.எம் அட்டைகளை கொடுத்துவிட்டு, பின்னர் அந்த ஏ.ரி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணம் பறித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

43 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0