உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முச்சக்கரவண்டி சாரதி கொ*லை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கம்பஹாவில் பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனுமாவத்தை பகுதியில் ஜனவரி 9 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பியகம – கெமுனுமாவத்தை பகுதியில் ஜனவரி (9) இரவு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர், தனது வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதை கண்டு வெளியே சென்று பார்த்த போது முகமூடி அணிந்திருந்தவர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

41 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

50 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

58 0 0