உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிவனடிபாத மலை யாத்திரிகர்களின் வருகையில் வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் ஏற்பட்ட மண் திட்டுகள் சரிவு காரணமாகவும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

பருவ காலத்தை நம்பி நல்லதண்ணி நகர் மற்றும் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் வர்த்தக நிலையங்களை குத்தகை அடிப்படையில் பெற்றவர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளனர்.

அத்துடன் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து ஆரம்பிக்கும் சியத்தல கங்குல ஓயா வில் எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மரங்கள் மற்றும் கற்கள், மண்திட்டுகள் நிரம்பி உள்ளது. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீராடும் இடத்தில் மண் திட்டுகள் மற்றும் கற்கள் குவிந்து கிடக்கின்றன. அதனை அகற்ற நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள், நோர்வூட் பிரதேச செயலாளர் முன் வர வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

41 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

58 0 0