உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போலி முறைப்பாடளித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

இரண்டு நபர்கள் தன்னை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸில் போலி முறைப்பாடு அளித்த நபரை கைது செய்யுமாறு ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய, ஹொரணை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் உள்ள வங்கியில் பணத்தை எடுத்துவிட்டு வீடு நோக்கி செல்லும் போது உந்துருளியில் வந்த சந்தேக நபர்கள் இருவர் தன்னை பொக்குனுவிட்ட – வெலிகம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஆழ்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, முறைப்பாட்டாளர் தான் வழங்கியது போலி முறைப்பாடு எனவும் அவர் விருப்பத்துடன் சந்தேக நபர்களுடன் உந்துருளியில் சென்றதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலி முறைப்பாடு அளித்த குற்றத்திற்காக முறைப்பாட்டாளரை கைது செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0