உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஐந்து புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஐந்து புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டிற்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக நடைபெற்ற நேர்முகப்பரீட்சையைத் தொடர்ந்து, இந்த 5 அரசியல் கட்சிகளையும் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் 83 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 47 கட்சிகள் ஆரம்ப நேர்முகப்பரீட்சைக்காத தெரிவு செய்யப்பட்டிருந்தன. இறுதி நேர்முகத் தேர்வுகளின் பின்னர், அந்தக் கட்சிகளில் 5 கட்சிகளுக்கு இவ்வாறு பதிவிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0