உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் உந்துருளி செலுத்துனர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

பெம்முல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான உந்துருளி செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான உந்துருளி செலுத்துனர் நேற்று காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது உந்துருளி செலுத்துனரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததால் பொலிஸார், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.

பின்னர் உந்துருளி செலுத்துனர் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான உந்துருளி செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0