உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி போலி முகநூல் கணக்கொன்றை நடத்தி வந்துள்ளார். அதில் போதைப்பொருள் பயன்பாட்டையும், வியாபாரத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளை இட்டு வந்துள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களைத் தருவதாகக் கூறி பொலிஸாரின் நம்பிக்கையை வென்று, அந்த மறைவிலேயே தனது போதைப்பொருள் வியாபாரத்தை சூட்சுமமாக முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி நகரில் உள்ள விடுதி ஒன்றினைச் சோதனையிட்ட போதே குறித்த யுவதியுடன் தொடர்புடைய மேலும் ஒரு தம்பதியினரும் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுவதி நடத்தி வந்த போலி முகநூல் கணக்கில், பல காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அத்துடன், உடற்பிடிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ‘சைமா’ என்பவருடைய போதைப்பொருள் வலையமைப்பின் கண்டி முகவராகச் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0